முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 33 அமைச்சர்கள் பதவியேற்றனர்!!

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்றத்தை தொடர்ந்து 33 அமைச்சர்களும் ஆளுநர் முன்னிலையில் பொறுப்பேற்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள திமுக, 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைப்பதற்கான பதவியேற்பு விழா சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாளிகையில் கொரோனா  எளிமையான முறையில் நடைபெற்று வருகிறது.

அப்போது, தமிழகத்தின் 23வது முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் முன்னிலையில் உறுதிமொழி அளித்து, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் என்று கூறி, தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். முதல்வர் முக ஸ்டாலினை தொடர்ந்து அவர் தலைமையிலான 33 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 34 அமைச்சர்கள்:

பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்பு முயற்சி, சிறப்புத் திட்ட செயலாக்கம், மாற்றுத்திறனாளிகள் நலன் ஆகிய துறைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வசம் உள்ளது.

  1. நீர்வளத்துறை அமைச்சராக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்,
  2. நகராட்சி நிர்வாகம் துறை அமைச்சர் கே.என்.நேரு,
  3. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி,
  4. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,
  5. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,
  6. வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்,
  7. வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரும்,
  8. தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு,
  9. சட்டம் நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி,
  10. வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி,
  11. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் பெரிய கருப்பன்,
  12. ஊரகத்தொழில்கள் மற்றும் சிறு தொழில்துறை அமைச்சர் அன்பரசன்,
  13. செய்தி விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,
  14. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன்,
  15. மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன்,
  16. போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன்,
  17. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,
  18. வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன்,
  19. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்ரபாணி ஆகியோரும்,
  20. கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் ஆர்.காந்தி,
  21. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா. சுப்ரமணியன்,
  22. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி,
  23. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்,
  24. இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு,
  25. பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர்,
  26. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
  27. தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு அமைச்சர் சி.வி. கணேசன்,
  28. தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்,
  29. சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்,
  30. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ்,
  31. சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான்,
  32. சுற்றுச்சூழல் ,காலநிலை மாற்றம், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்,
  33. நிதி மற்றும் மனிதவளத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் உறுதிமொழி எடுத்து பொறுப்பேற்றுக்கொண்டனர்.
author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்