3 எம்எல்ஏக்கள் விவகாரம் : சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை-உச்சநீதிமன்றம் உத்தரவு

3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுக கொறடா சபாநாயகரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல். ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

மேலும் சபாநாயகர் அனுப்பிய  நோட்டீசுக்கு 7 நாட்களில்  எம்.எல்.ஏ.க்கள் பதில் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

இதனால் சபாநாயகர் தனபால்  அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இதை விசாரித்த உச்சநீதிமன்றம் 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பெரும்  பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment