25,000 போலீஸ்… " 2 ADGP , 6 IG , 8 SP , 32 DSP "….42 இன்ஸ்பெக்டர் , 98 SI…ஐயப்பன் கோவிலில் அரசு அதிரடி…!!

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு காலங்களில் 4 கட்டங்களாக சுமார் 25 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. சபரிமலையில் வயது வித்தியாசமின்றி பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் கடந்த ஐப்பசி மாத பூஜைகளின்போது உச்சநீதிமன்ற உத்தரவை கேரள அரசால் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இளம் பெண்கள் செல்வதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து யாராலும் ஐயப்பனை தரிசிக்க செல்ல முடியவில்லை. இதையடுத்து மண்டல மகர விளக்கு காலங்களில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி இளம் பெண்களை அழைத்து சென்றுவிட வேண்டும் என்று கேரள அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதன்படி கேரள அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
சன்னிதானத்தில் மண்டல மகர விளக்கு காலங்களில் 24 மணி நேரத்துக்கு மேல் யாரும் தங்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய பகுதிகள் அதிதீவிர பாதுகாப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் மண்டல, மகர விளக்கு காலங்களில் 2 ஏடிஜிபிகள், 6 ஐஜிகள், 8 எஸ்பிக்கள் தலைமையில் சுமார் 25 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இவர்கள் 4 கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஒரு கட்டம் என்பது 15 நாட்கள் ஆகும். ஒவ்வொரு கட்டத்திலும் நிலக்கல் முதல் பம்பை வரை ஒரு ஐஜியின் தலைமையிலும், சன்னிதானத்தில் இன்னொரு ஐஜி தலைமையிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள். இவர்களின் கீழ் 2 எஸ்பிக்களும் இருப்பார்கள். இந்த போலீஸ் படையில் 32 டிஎஸ்பிகள், 42 இன்ஸ்பெக்டர்கள் 98 சப் இன்ஸ்பெக்டர்கள் இருப்பார்கள். 165 பெண் போலீசாரும் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் நிலக்கல் மற்றும் பம்பையில் இருப்பார்கள். தேவைப்பட்டால் பெண் போலீசார் சன்னிதானத்துக்கும் அனுப்பி வைக்கப்படுவார்கள். மேலும் 150 கமாண்டோ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 80 வீரர்கள், சிபிஆர்பிஎப் ராபிட் ஆக்‌ஷன் போர்ஸ் வீரர்கள் 220 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.தொடர்ந்து ஐயப்பன் கோவில் வழிபாட்டில் பெண்களை அணுமதிக்க அரசு முனைப்புடன் இருப்பதால் பரபரப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment