அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு..! கவலையோ, சந்தோஷமோ இல்லை..! – எல்.முருகன்

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து கவலையோ, சந்தோஷமோ இல்லை.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 12-ம் தேதி தொடங்கவுள்ளது. அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, கூட்டணி  உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக, அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக  தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.

அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு விவகாரத்தில், தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்தானது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளார்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய வர, அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து கவலையோ, சந்தோஷமோ இல்லை. ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளிலும் எங்களுடைய இலக்கு வெற்றியாகத்தான் இருக்கும் என்றும், பாஜக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.