Categories: Uncategory

20 வங்கிகளுக்கு 88 ஆயிரம் கோடி நிதியுதவி : மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தகவல்

இந்தியாவில் 20 வங்கிகளுக்கு மத்திய அரசு ரூபாய்.88 ஆயிரத்து 139 கோடியை முதலீட்டாக வழங்குகிறது. இதனை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். ஐடிபிஐ வங்கிக்கு மட்டுமே ரூபாய்.10,610 கோடியை , முதலீட்டு நிதியாக பெறுகிறது.
பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், அதை சமாளிக்கும் நோக்கத்தில் ரூ.2.1 லட்சம் கோடி நிதி முதலீடாக அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிதி 2018-19, 2019-20 ஆம் நிதி ஆண்டில் பிரித்து தரப்படும் எனத் தெரிவித்தது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மேலும் கூறுகையில், அரசு பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகத்தை உயர்ந்த தரத்துக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் கடந்த காலத்தில் இருந்தது போன்று வரும் காலத்தில் மோசமான நிலைமை வராமல் தடுக்க வேண்டும். எனவும் கூறியிருந்தார்.
பொதுத்துறை வங்கிகள் ஏராளமான வாராக்கடனில் சிக்கித் தவிக்கிறது. இதை மீட்கும் வகையில் இந்த முதலீடு நிதி அளிக்கப்படுகிறது. இந்த நிதி ஆண்டில் மார்ச் 31-ம் தேதிக்குள் ஸ்டேட் வங்கிக்கு ரூ.8,800 கோடியும், பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.9 ஆயிரத்து 232 கோடியும் வழங்கப்படும்.
யுசிஓ வங்கிக்கு ரூ.6,570 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.5,473 கோடி, பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு ரூ.5,375 கோடியும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.5,158 கோடியும், கனரா வங்கிக்ககு ரூ.4,865 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.4,694 கோடியும் என பிரித்து அளிக்கப்பட உள்ளது.
மேலும், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.4,534 கோடியும், ஓரியன்டல் ஆப் காமர்ஸ் வங்கி ரூ.3,571 கோடியும் , தீனா வங்கி ரூ.3,045 கோடியும், பேங்க் ஆப் மஹாராஷ்டிரா ரூ.3,173 கோடியும் வழங்கப்பட உள்ளது.
யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ2,634 கோடி, கார்பபரேஷன் வங்கி ரூ.2,187 கோடி, சின்டிகேட் வங்கிக்கு ரூ.2,839 கோடி, ஆந்திரா வங்கிக்கு ரூ.1,890 கோடி, அலகாபாத் வங்கிக்கு ரூ.1500 கோடியும், பஞ்சாப் அன்ட் சிந்து வங்கிக்கு ரூ.785 கோடியும் நிதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
source : dinasuvadu.com
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

46 mins ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

5 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

6 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

6 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

6 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

7 hours ago