ஒரு கழிவறையில் 2 வெஸ்டர்ன் டாய்லெட்…! அற்புதமான திராவிட மாடல்…! – ஜெயக்குமார்

அற்புதமான இந்த திராவிட மாடல் தொழில் நுட்பத்தை ஜப்பான்ல கேட்டாக… ஜெர்மனில பாராட்டினாக என ஜெயக்குமார் விமர்சனம்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்  அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில், சிப்காட் தொழில் பூங்கா செயல்பட்டு வருகிறது.அங்கு ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட  திட்ட அலுவலகத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த திட்ட அலுவலகத்தில்  ஒரே கழிவறையில், இரண்டு பேர் அருகருகே அமரும் வண்ணம் வெஸ்டர்ன் டாய்லெட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது இது தற்போது சர்ச்சையாகி உள்ளது.

இது பற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டு, ‘அற்புதமான இந்த திராவிட மாடல் தொழில் நுட்பத்தை ஜப்பான்ல கேட்டாக… ஜெர்மனில பாராட்டினாக..’ என பதிவிட்டு விமர்சித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment