18 எம்.எல்.ஏ- க்கள் தகுதி நீக்க வழக்கு : பரபரப்பான நிலையில் இன்று இறுதி வாதம்….!!!

18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் இறுதி விசாரணை இன்று நடக்கிறது. இவ்வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இந்த வழக்கின் இறுதி விசாரணை நடக்க உள்ளது. சபாநாயகர் தரப்பு வாதம் இன்று நடக்க உள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கையில்லை என்று தினகரனுக்கு ஆதரவான 18 எம்எல்ஏ – க்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதனால் கொறடா மூலம் இவர்கள், எல்லாரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள்.

இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. முதலில் வந்த தீர்ப்பில் அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் வேறு வேறு தீர்ப்பை வழங்கினார்கள். இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணாவிடம் சென்றது.
தற்போது சபாநாயகர் தரப்பில் அரிமா சுந்தரம் வாதிட்டு வருகிறார். அவர் இன்று தன்னுடைய வாதத்தை முடிப்பர். இதுவரை அரசு தரப்பு வாதம், டிடிவி தினகரன் தரப்பு வாதம், எல்லாம் முடிவடைந்து இருக்கிறது.
இன்றுடன் அனைத்து வாதங்களும் முடிவடையும் என்று கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment