கொரோனா ஊரடங்கின் போது 17 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு – மஹாராஷ்டிரா அரசாங்கம் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கின் போது பிற மாநிலங்களிலிருந்து வந்து தொழில் செய்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளதாக மஹாராஷ்டிரா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பரவ துவங்கியதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து வெளியூர்களிலிருந்து வந்திருந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்ட பின்னர் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிராவில் 17 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், கேரளா, நாகலாந்து, மணிப்பூர், அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் ஆகிய இடங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்து மகாராஷ்டிராவில் தொழில் செய்த 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் மற்ற பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal