முதலமைச்சர் பழனிசாமி செல்லும் விமானம் உட்பட 15 விமானம் தாமதம்.!

  • போகி பண்டிகை அன்று பழைய பொருள்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை எரித்து கொண்டாடி வருகின்றனர்.
  • சென்னையில் பல  இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. புகைமூட்டம் காரணமாக முதலமைச்சர் பழனிசாமி சேலம் செல்லும் விமானமும் தாமதமாக புறப்படுகிறது.

போகி பண்டிகை அன்று பழையன கழிதலும் , புதியன புகுதலும் என்ற அடிப்படையில் பழைய பொருள்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் ரப்பர் பொருட்கள் போன்றவற்றை எரிப்பதினால் நச்சு கலந்த வாயு வெளியேறுகிறது.

இதனால் ஏற்படும் புகையின் காரணமாக சென்னையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இந்த புகையால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகிறது.இதை தவிர்க்க பிளாஸ்டிக் பொருட்கள்,  ரப்பர் பொருட்கள் போன்றவற்றை எரிக்கக் வேண்டாம் என மாசு கட்டுப்பாடு வாரியம் கூறியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் பல  இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் 20 விமானங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தரையிறங்கப்பட்டது. டெல்லி,மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 15-க்கும் மேற்பட்ட விமானங்களும் தாமதமாக புறப்படுகின்றன. புகைமூட்டம் காரணமாக முதலமைச்சர் பழனிசாமி சேலம் செல்லும் விமானமும் தாமதமாக புறப்படுகிறது.

author avatar
murugan