கிறிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு 144 தடை..! உ.பி அரசு அதிரடி உத்தரவு.! 

உத்தர பிரதேசத்தில் உள்ள ஜிபி நகரில் ஜனவரி 2ஆம்  தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, கௌதம் புத்த நகரில் (ஜிபி நகர்) கொரோனா வைரஸ் தடுப்பிற்காக போடப்பட்ட தடை உத்தரவை தொடர்ந்து நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா முழுவதும் 144 தடை உத்தரவானது வரும் வருடத்தில் ஜனவரி  2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை ஆணையரகம் அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிடப்பட்ட இந்த உத்தரவில், “இந்த காலகட்டத்தில் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா முழுவதும் பொதுக் கூட்டங்கள் மற்றும் சபைகளை நடத்துவது தடைசெய்யப்படும்” என்று நொய்டா காவல்துறை கூறியது. மேலும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவது தடைசெய்யப்படும்.

அவசரகால சேவைகள் மற்றும் பணியில் இருக்கும் காவலர்கள் அல்லது துணை ராணுவப் படைகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லை. தற்பொழுது வரவிருக்கும் கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்த தடை உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment