மருத்துவ கவுன்சில் தேர்தலை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மருத்துவ கவுன்சில் தேர்தலை ஆன்லைனில் நடத்துவது குறித்து விதிகளை வகுக்க வேண்டும் என்றும் மருத்துவ கவுன்சிலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் என்ற அறிவிப்பை ரத்து செய்து, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடக் கோரியும், ஓ.டி.பி. மூலம் மின்னணு முறையில் நடத்த உத்தரவிடக் கோரியும் தொடரப்பட்ட வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மருத்துவ பதிவு சட்டமும், விதிகளும் 3 மாதங்களில் முழுமையாக திருத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்த நிலையில், 3 மாத காலஅவகாசம் வழங்கியது நீதிமன்றம்.  தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல், வரும் டிசம்பர் 19-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி வரை நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment