13,331 தற்காலிக ஆசிரியர் நியமனம் – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை தந்து தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கலாம் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. 

அரசு பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர் நியமனம் குறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. உயர்நீதிமன்ற கிளையின் அறிவுறுத்தலை திறந்து திருத்திய வழிகாட்டுதல் நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை தந்து தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கலாம், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணியாற்றி வந்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கலாம்,  முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான டிஆர்பி சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களையும் ஆசிரியர்களாக நியமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிக்கு அருகே, மாவட்டத்திற்குள் வசிப்போருக்கு முன்னுரிமை தந்து ஆசிரியர்களாக நியமிக்கலாம், திறமை அடிப்படையில் மட்டுமே தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் பணியில் திருப்தி அளிக்கவில்லை என்றால், உடனே பணியில் இருந்து விடுவிக்கப்படுவர். தேர்வான விண்ணப்பதாரர்களை வகுப்பறையில் பாடம் நடத்த வைத்து அவர்களது திறனை பரிசோதிக்க வேண்டும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் வரும் 4 முதல் 6-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்க வேண்டும். சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரத்தை வரும் 6-ம் தேதி இரவுக்குள் ஆணையரகத்துக்கு பள்ளிகள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment