1,00,000 பேர் பங்கேற்பு…..மத்திய அரசுக்கு எதிராக பேரணி…திரளும் விவசாயிகள…!!

விவசாயிகள் மீது மத்திய அரசு அக்கரை காட்டவில்லை எனக் கூறி டெல்லியில் வரும் 29, 30-ம் தேதிகளில் மாபெரும் பேரணி நடத்தவுள்ளதாக அகில இந்திய விவசாய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும், இதனை கண்டித்து நாடெங்கிலும் இருந்து சுமார் ஒரு லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் பேரணி டெல்லியில் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவித்துள்ளது.

இதற்காக ராம் லீலா மைதானத்தில் ஒன்று கூடும் விவசாயிகள் அங்கு நடைபெறும் விழாவில் கவுரவிக்கப்படுவார்கள் என்றும், அதனை தொடர்ந்து ராம்லீலா மைதானத்தில் இருந்து அனைத்து விவசாயிகளும் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள, ராகுல்காந்தி, சந்திரபாபு நாயுடு, கேரள பினராயி விஜயன், மம்தா பானர்ஜி உள்பட அனைத்து எதிர்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

DINASUVADU.COM

author avatar
Dinasuvadu desk

Leave a Comment