ஹெச்.1 விசா பிரச்சினையால் 60 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்காவில் வேலையிழக்கும் அபாயம்!

அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களில், H-1B விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு H-4 விசா வழங்கப்பட்டு வருகிறது. H-4 விசா பெற்றவர்கள், அமெரிக்காவில் பணி புரிய, ஒபாமா அரசு அனுமதி தந்த நிலையில், Donald Trump அரசு தற்போது அதை நீக்கியுள்ளது.

இதன் மூலம், அமெரிக்காவில் கணவன் அல்லது மனைவியுடன் H-4 விசா மூலம் தங்கி பணியாற்றி வரும் 60 ஆயிரம் இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதில், 80 சதவீதம் பேர் பெண்களாக இருப்பர் என்றும், இந்திய தூதரக பணியாளர்களும் இதனால் பாதிப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment