விடுதலை புலிக‌ளின் புக‌ழ் பாடிய‌ சுட‌ரொளி ப‌த்திரிகையின் ப‌ங்குக‌ளை, ம‌கிந்த‌ ராஜ‌ப‌க்ச‌வின் ம‌க‌ன் நாம‌ல் ராஜ‌ப‌க்சேவிற்கு விற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்

ஒரு கால‌த்தில் விடுதலை புலிக‌ளின் புக‌ழ் பாடிய‌ சுட‌ரொளி ப‌த்திரிகையின் 90% ப‌ங்குக‌ளை, ம‌கிந்த‌ ராஜ‌ப‌க்ச‌வின் ம‌க‌ன் நாம‌ல் ராஜ‌ப‌க்சே வாங்கியுள்ளாராம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிற்கு சொந்தமாக இருந்த சுடரொளி பத்திரிகை விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது பத்திரிகையில் 10% பங்குரிமையை மட்டுமே சரவணபவன் வைத்திருக்கிறார். மிகுதி 90% பங்குரிமையை மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வன் நாமல் ராஜபக்ச கொள்வனவு செய்துள்ளார் என நம்பதகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

மஹிந்த ராஜபக்சவுடன் நெருக்கமாக இருந்த தமிழ் பத்திரிகையாளர் ஒருவர் முன்னர் சுடரொளி பத்திரிகையில் பணியாற்றியிருந்தார். அவரை பினாமியாக வைத்தே இந்த டீல் முடிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களின் முன்னர் இந்த வியாபாரம் முடிக்கப்பட்டது.

தலைநகர் மற்றும் கிழக்கை மையப்படுத்திய தமிழ் பத்திரிகை கூட்டு எதிர்க்கட்சிக்கு அவசியம் என்பதால் சுடரொளி கொள்வனவு செய்யப்பட்டது. அண்மைய உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றில், வடக்கு தமிழர்களை என்ன செய்யும் வளைத்துப்போட முடியாது, அதனால் இப்போது அவர்களை குறிவைத்து வீண் பண விரயம் செய்ய வேண்டியதில்லையென நாமல் ராஜபக்ச கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment