விஜய் ஆண்டனி நடித்துள்ள “காளி” படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் …!சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி …!

விஜய் ஆண்டனி நடித்துள்ள “காளி” படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை  நீக்கம் செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி  சென்னை உயர் நீதிமன்றம், உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கிய காளி படத்தை வெளியிட தடை விதித்தது.
காளி திரைப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் ஆன்டனி மனைவி பாத்திமா, ஏற்கனவே அண்ணாதுரை என்ற படத்தை தயாரித்திருப்பதாகவும், அதனை வெளியிட்டதில் தமக்கு 5 கோடியே 79 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறி பிக்சர் பாக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அலெக்சாண்டர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இழப்பு தொகையைத் தராமல் காளி படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதி, காளி திரைப்படத்திற்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.

மேலும், வரும் 11 ஆம் தேதிக்குள் இழப்புத் தொகையைச் செலுத்தி விட்டால், தடை தானாகவே நீங்கி விடும் எனவும், தவறும் பட்சத்தில் தடை நீடிக்கும் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விஜய் ஆண்டனி நடித்துள்ள “காளி” படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை  நீக்கம் செய்தது சென்னை உயர்நீதிமன்றம். பிக்சர் பாக்ஸ் நிறுவனத்துக்கு ரூ 2 கோடிக்கான வங்கி உத்தரவாதத்தை செலுத்தி படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment