வாய்ப்புகள் வேண்டி கோவில்களை நாடும் தமன்னா…!!

 
 
அஜீத், ஜெயம் ரவி, விஷால், சிம்பு என பரவலாக எல்லா ஹீரோக்களுடனும் நடித்து முன்னணி ஹீரோயின் பட்டியலில் இடம் பிடித்தவர் நடிகை தமன்னா. இவர் தற்போது விக்ரம் ஜோடியாக ஸ்கெட்ச் படத்தில் மட்டுமே நடிக்கிறார். வேறு படங்கள் எதுவும் அவருக்கு கைகூடி வரவில்லையாம். எனவே, இந்த ஆண்டு அமோகமாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் அவர் கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து வருகிறார். சமீபத்தில் விஜயவாடாவில் உள்ள துர்கை அம்மன் கோயிலுக்கு சென்றார். அவருடன் அவரது அம்மா ரஞ்சனி சென்றிருந்தார். சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தி பரவசத்துடன் வழிபட்டார் தமன்னா என்பது குறிப்பிடத்தக்கது.
 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment