முழு மதுவிலக்கு தமிழகத்தில் கொண்டுவர ராமதாஸ் கோரிக்கை!

பாமக நிறுவனர் ராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக ஐந்நூறு மதுக்கடைகளைத் திறக்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், உயர்வகை மதுபானங்களை வீடுதேடிச் சென்று விற்க முடிவு செய்திருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசுக்கான கடமைகள் அனைத்தையும் மறந்து விட்டு, மது விற்பதை மட்டுமே முதன்மைப் பணியாக அரசு கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு மதுவணிகத்தைப் பெருக்குவதில் மட்டும் கவனம் செலுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அனைத்து நிதி நெருக்கடியையும் தீர்ப்பதற்கு மது விற்பனையை அதிகரிப்பது தான் தீர்வு என்று தமிழக அரசு கருதுவதாகவும் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்…

Leave a Comment