மத்தியப்பிரதேச முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமல்நாத் கடந்து வந்த பாதை…!!

மத்தியப்பிரதேச முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமல்நாத், கடந்து வந்த பாதையை காணலாம்.
உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் 1946ஆம் ஆண்டு பிறந்தவர் கமல்நாத்.
1980 ஆம் ஆண்டு முதன் முதலில் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மக்களவைத் தொகுதியில் இருந்து 9 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புக்கு உரியவர். இவரது சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை.
1991ஆம் ஆண்டில் இருந்து பலமுறை மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். 2001 முதல் 2004 வரை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். காந்தி குடும்பம், நேரு குடும்பம் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புடையவர். இந்திரா காந்தியின் மூத்த மகன் சஞ்சய் காந்தியின் பள்ளிக்கால நண்பராக இருந்தவர்.
மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கடந்த மே மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இந்தத் தேர்தலுக்காக கடுமையான உழைப்பை வெளிப்படுத்தினார். அதன் வெளிப்பாடாக தற்போது மத்தியப்பிரதேச முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment