பூமியை நோக்கி சீனாவின் கைவிடப்பட்ட விண்வெளி ஆய்வு நிலையம் விழுபோகிறதா?விரைவில் பூமிக்கு ஆபத்தா?

புதிய கணிப்புகள் சீனாவால் கைவிடப்பட்ட விண்வெளி ஆய்வுநிலையமான டியாங்காங்-1, ஏப்ரல் முதல்வாரத்தில் பூமியை நோக்கி விழும் என  தெரிவிக்கின்றன.

டியாங்காங்-1 (Tiangong-1) என்ற விண்வெளி ஆய்வு நிலையத்தை சீனா 2011ஆம் ஆண்டு அக்டோபர் முதல், விண்வெளியில் பராமரித்து வந்தது. 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு அதன் மீதான கட்டுப்பாட்டை தரைநிலையம் இழந்துவிட்டதாக சீனா தெரிவித்தது. கைவிடப்பட்ட இந்த டியாங்காங்-1 ஆய்வு நிலையம் பூமியை நோக்கி இந்த மாத இறுதியில் நொறுங்கி விழும் என ஏற்கெனவே வல்லுநர்கள் கணித்திருந்தனர். 8.5 டன் எடை கொண்ட டியாங்யாங்-1, பூமியை நோக்கி விழும் வேகத்தில் வளிமண்டல உராய்வின் காரணமாக எரிந்து சிதைந்து விடும் என்றும், சிதைகூளங்கள் மட்டுமே பூமியின்மீது விழ வாய்ப்பிருப்பதாகவும் வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், டியாங்காங்-1 விண்வெளி ஆய்வு நிலையம் ஏப்ரல் முதல்வாரத்தில் பூமியை நோக்கி விழும் எனவும், 43º வடக்கு அல்லது 43º தெற்கு அட்சரேகைகளுக்கு அப்பால் கடல்பகுதியில் விழும் என்றும் புதிய கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment