புனே அருகே இரு பிரிவினரிடையே மோதலால் வன்முறை!

கோரேகான்  என்ற இடத்தில் 1818-ஆம் ஆண்டு அரங்கேறிய ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தின் 200-ம் ஆண்டு நினைவுதினம் திங்களன்று நடைபெற்றது..
நினைவுத்தூண் அமைந்துள்ள இடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின்போது, பேஷ்வா இனத்தவருக்கும், மற்றொரு பிரிவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இரு தரப்பும் கற்களை வீசிக் கொண்டதால், வன்முறையில் வெடித்தது. வாகனங்களும், வீடுகளும் தீக்கிரையாகின.
பதற்றம் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வன்முறை குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்நவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
source: dinasuvadu.com

Leave a Comment