பிளாஸ்டிக் பொருட்கள் தடையால் வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது – கே.சி. கருப்பணன்…!!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிளாஸ்டிக் தவிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் கருப்பணன் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் வரும் 1ஆம் தேதி முதல் 14 பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுகிறது. இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் சமமாக காணப்படுகிறது. இந்தநிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்கள் கே.சி. கருப்பணன் மற்றும் விஜயபாஸ்கர் கலந்து கொண்டனர்.
மருத்துவர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து உறுதிமொழியை அவர்கள் ஏற்றனர். உறுதிமொழியை ஏற்றபின்பு இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் 14 பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கே.சி. கருப்பணன் தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment