பிரதமர் மோடி முக்கிமான குற்றஞ்சாட்டப்பட்ட நபர்…வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் விமர்சனம்…!!

பிரதமர் நரேந்திர மோடி  ரபேல் போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பாக , முக்கிமான குற்றஞ்சாட்டப்பட்ட நபராவார் என்று உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் கூறினார்.
புதுதில்லியில் உள்ள கான்ஸ்டிட்யூசன் கிளப் அரங்கத்தில் புதனன்று, ரஃபேல் ஊழல் மீதான பொது விசாரணை இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் நடைபெற்றது. இந்த விசாரணையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் முதலானவர்கள் பங்கேற்று உரையாற்றினார்கள்.
உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் பேசுகையில், “ரபேல் ஊழல் விவகாரம் தொடர்பாக, சிபிஐ இயக்குநரிடம் கடந்த 4ஆம் தேதி புகார் மனு அளித்தோம். அதில் பிரதமர் மோடி முக்கிமான குற்றஞ்சாட்டப்பட்ட நபராவார். ரபேல் போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பாக, ஆட்சேபணை தெரிவித்த மூன்று அதிகாரிகள் விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளனர். இப்போது ரபேல் ஊலை விசாரிக்க இருந்த சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டிருக்கிறார். இது ஏன்” எனக் கேள்வி எழுப்பினார்.மேலும் பொது விசாரணையில் பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் டி.ரகுநாதன், ரவி நாயர் உள்ளிட்டோரும் உரையாற்றினார்கள்.
dinasuvdu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment