பதிலடி கொடுத்த தல தோனி…வியப்பில் தேர்வுக்குழு…!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் மின்னல் வேகத்தில் ஓடிப்போய் டைவ் அடித்து கேச் பிடித்த தோனி, டி20 அணியில் இருந்து தன்னை நீக்கிய தேர்வுக்குழுவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
 
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு உடனான டி20 தொடர்களில் இருந்து தோனி நீக்கப்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த ரசிகர்கள் டுவிட்டரில் தேர்வுக்குழு மற்றும் கிரிக்கெட் வாரியம் குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், 3-வது ஒருநாள் போட்டியில், பும்ரா வீசிய பந்தை வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் ஹேம்ராஜ் Hook Shot  ஆட முயன்றார். ஆனால், பந்தானது பேட்டில் சரியாக படாததால் Backward Square Leg திசையில் உயரே பறந்தது.
அப்போது, மின்னல் வேகத்தில் ஓடிய தோனி, டைவ் அடித்து கேச் பிடித்தார். அவரின் கேச்சைப் பார்த்த ரசிகர்கள் பிரமிப்பில் மூழ்கினர். இந்த கேச்சின் மூலம், தான் முழு உடல்தகுதியுடன் இருப்பதை தேர்வுக்குழுவிற்கு தோனி சூசமாக தெரிவித்துள்ளார்.
dinasuvadu.com 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment