நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு ???

 

நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடரில் மல்லையாவின் கடன் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிகழ்ந்த 11 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி காவிரி பிரச்னை  மேலும் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கிய நிலையில் பிப்ரவரி 1ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்குகிறது. முதல் அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மசோதா இரண்டாவது அமர்வில் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த அமர்வில் மல்லையாவின் கடன், பஞ்சாப் நேஷன் வங்கியில் நிகழ்ந்த 11,000 கோடி ரூபாய் அளவிலான மோசடி குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரச்னையை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்த அமர்வில் வங்கிக் கடன் மோசடி விவகாரம் நாடாளுமன்றத்தில் கடும் அமளியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரசின் மக்களவைக் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கடன் என்கிற பெயரில் வங்கிகளை கொள்ளையடித்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுவது வாடிக்கையாகி வருவதாகவும், இது ஒரு வங்கி சம்பந்தபட்ட விஷயம் அல்ல என்றும் மத்திய அரசின் நேர்மையின்மையை காட்டுகிறது என்றும் கூறினார்.

நாளை இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பிரச்னையை எழுப்பும் என்றும் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.

இதற்கிடையே பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி குறித்து மாநிலங்களவையில் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க காங்கிரஸ் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு

author avatar
Dinasuvadu desk

Leave a Comment