நான் சிகிச்சை அளிக்கவில்லை : டாக்டர் பாலாஜி விசாரனையில் தகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5 ஆம் தேதியன்று இறந்தார். அவரது மறைவில் சந்தேகம் உள்ளதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டது.

அதில் அப்பல்லோவில் மருத்துவம் பார்த்த மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் பங்கேற்ற மருத்துவர் பாலாஜியை விசாரிக்கையில் அவர், தான் ஜெயலிதாவுக்கு மருத்துவம் பார்க்கவில்லை. ஜெவுக்கு லண்டன் எய்ம்ஸ் மருத்துவர்கள் தான் மருத்துவம் பார்த்தனர். மேலும் ஜெ இட்லி சாப்பிடவில்லை, பல நாட்கள் திரவ உணவு மட்டுமே உட்கொண்டார். ஜெயலலிதாவுடன் கடைசி வரை சசிகலா தான் இருந்தார் எனவும் விசாரணையில் கூறினார்.

மருத்துவர் பாலாஜி

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment