தொப்பை தாங்க தொல்லையே…!! இதோ…. தட்டையான வயிற்றை பெற எளிதான 5 வழிகள்….!!!

இன்றைய தலைமுறையினரின் மிக பெரிய தொல்லையே தொப்பை தான். இளம் தலைமுறையினர் தட்டையான வயிறு இருப்பதை தான் விரும்புவர். ஆனால் அதற்க்கு மாறாக பலருக்கு தொப்பை தான் இருக்கிறது. இதற்காக பல முயற்சிகள் மேற்கொண்டாலும், அதனால் பக்கவிளைவுகள் தான் ஏற்படுகிறதே தவிர, தீர்வு கிடைத்தபாடில்லை.

தட்டையான வயிற்றை பெற 5 வழிகள் :

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் :

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் மிக குறைவான கலோரிகளை கொண்டது. இது தசைகளின் சீரான வளர்ச்சிக்கும், கொழுப்புகளைக் காக்கவும் பெரிதும் உதவுகிறது. இதனால் பீன்ஸ் மற்றும் பருப்புவகைகளை உணவில் சேர்த்து கொம்டால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைந்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

பாதாம் :

பாதாமில் புரோட்டீன், நார்சத்து, வைட்டமின் ஈ மற்றும் சக்தி வாய்ந்த ஆண்டி – ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. ஆகவே டயர்டில் இருப்போர், ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாமை உட்கொண்டு வர பசியுணர்வு குறைந்து, அடிக்கடி எதையாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் நீங்கும்.

சிவப்பு குடைமிளகாய் : 

சிவப்பு குடைமிளகாயில் வைட்டமின் சி ஏராளமாக நிரைந்துள்ளது. இது கொழுப்புகளை கரைக்கத் தேவையான ஊர் ஊட்டச்சத்து. மேலும் இதில் பீட்டா – கரோட்டின் மற்றும் லைகோபைன் சத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சத்துக்கள் உடல் எடை குறைய உதவுவதாக ஆய்வுகளும் கூறுகின்றன.

பசலை கீரை :

கீரை வகைகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது. பச்சை இலைக் காய்கறிகளான கீரைகளை உட்கொண்டால் அடிக்கடி ஏற்படும் பசியுணர்வு குறைந்து, கண்டா உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறைந்து விரைவில் தொப்பை மற்றும் எடையைக் குறைக்க உதவுவதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

ஆப்பிள் :

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது என சொல்வார்கள். ஏனெனில் அந்த அளவில் ஆப்பிள் பழத்தில் சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக ஆப்பிள்களில் கலோரிகள் குறைவு. ஆனால் பசியுணர்வை தடுக்கும் நார்சத்து அதிகம். எனவே இதனை தினமும் ஸ்னாக்ஸ் நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் தொப்பையை குறைக்கலாம்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment