தேர்தல் பறக்கும் படையினரால் 6 கிலோ தங்கம் பறிமுதல் …..

  • சென்னையில் யானை கவுனியில், லோகேஷ் என்பவர் கொண்டு வந்த 6 கிலோ தங்கம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான சிறப்பு ஏற்பாடுகள் தமிழகமெங்கும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும், தங்களது தேர்தல் பணிகளில் முழுவீச்சுடன் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை விதித்துள்ளது. உரிய ஆதாரம் இன்றி கொண்டு செல்லப்படும் படம் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தனர். மேலும் சமூக வலைதள நிர்வாகிகளுக்கு தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் யானை கவுனியில், லோகேஷ் என்பவர் கொண்டு வந்த 6 கிலோ தங்கம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் தண்டையார்பேட்டை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment