47 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 60 அடி ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தை மீட்பு

  • ஆழ்துளை அருகில்  மீட்பு குழுவினர்  70 அடி பள்ளம் தோண்டி சிறுவனை  மீட்டனர். 
  • மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஹரியானா மாநிலம் ஹிஸ்தாரில் கடந்த  புதன்கிழமை வீட்டுக்கு வெளியே விளையாடிய 18 மாத குழந்தை நதீம் கான் 60 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில்  விழுந்தான். உடனடியாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவலை தெரிவித்தனர்.விரைந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சிசிடிவி கேமராக்கள் ஆழ்துளைக்குள் அனுப்பினார் , அதில் சிறுவன் உள்ளே இருக்கும் காட்சிகள் தெரியவந்தது . உடனடியாக சிறுவனுக்கு சுவாச பிரச்சனைகள்  ஏற்படக்கூடது என்பதற்காக ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது.

ஆழ்துளை அருகில்  மீட்பு குழுவினர்  70 அடி பள்ளம் தோண்டி சிறுவனை  மீட்டனர்.  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில்  அந்த  சிறுவன் நலமுடன் உள்ளான் என மருத்துவர்கள் தெரிவித்து
உள்ளனர்.கடந்த புதன்கிழமை மாலை 5 மணிக்கு ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை சுமார் 47 மணி நேர போராட்டத்திற்கு பின் நேற்று மீட்டனர் என கூறியுள்ளனர்.
author avatar
murugan

Leave a Comment