திமுகவின் தேர்தல் அறிக்கை பொய்யானது : தமிழிசை செளந்தரராஜன்

  • தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக.
  • திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பொய்யான தேர்தல் அறிக்கையாக வே உள்ளது.

மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு தீவிரமான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து கூறிய தமிழிசை செளந்தரராஜன், திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பொய்யான தேர்தல் அறிக்கையாகவே உள்ளது என கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த அறிக்கையில், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை வைத்து தான் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment