தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்கள் என்றால், நடிகர் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் மிக சிறந்த நண்பர்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அஜித் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பின் போது, தளபதி விஜய்யை பாராட்டியுள்ளார்.
தல அஜித்தின் விஸ்வாசம் படப்பிடிப்பின் போது அனைவருடனும் கேரவனில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது தொலைக்காட்சியில் தளபதி விஜய் நடித்த’ தெறி ‘படத்தில் இருந்து ஒரு பாடல் ஒளிபரப்பானது.
அந்த பாடலில் விஜய்யின் நடனத்தை பார்த்து விட்டு தல அஜித், எப்படி அசால்ட்டா ஆடுறாரு பாருங்க. பிறக்கும் போது டான்ஸ் ஓட பிறந்த மனிதர் அவர் என தளபதி விஜய்யை புகழ்ந்து பேசியதாக கூறியுள்ளார்.