சாய் பல்லவி – ஃபகத் பாசில் நடிப்பில் கோடையில் களமிறங்கும் புதிய படம்!!!

வேலைக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஃபகத் பாசில். இவர்  மலையாள சினிமாவின் முன்னனி நடிகர் ஆவார். அடுத்ததாக தியாகராஜா குமாரராஜா இயக்கி வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ‘கும்பலிகினி நைட்ஸ்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ‘அதிரன்’ எனும் மலையாள  படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்தை விவேக் என்பவர் இயக்கி வருகிறார். இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரலில் வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment