பாலிவுட்டில் கங்கனா ரனவத் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் குயின். இந்த படம் காமெடி டிராமாவாக வெளியானது. இந்த படம் தற்போது தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது.
தமிழ் பதிப்பில் காஜல் அகர்வால் முன்னனி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார். தெலுங்கு பதிப்பில் தமன்னா முன்னனி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தட் இஸ் மகாலக்ஷ்மி என பெயரிடப்பபட்டுள்ளது.
இந்த படத்தின் டீசர் டிசம்பர் 21இல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த தேதியில் தான் தமிழ் குயின் ரிமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தின் டீசரும் வரவுள்ளது.
DINASUVADU