டி.டி.வி.தினகரன் பண்ணை வீட்டில் ஆய்வு!

புதுச்சேரி அருகே பொம்மையார்பாளையத்தில் உள்ள  டி.டி.வி.தினகரன் பண்ணை வீட்டில் வருமானவரித்துறை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆய்வின் போது சீல் வைத்து சென்ற அறையை திறந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டி.டி.வி.தினகரனுக்கு சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது. இங்கு மாட்டுப்பண்ணை, விவசாய தோட்டங்கள் ஆகியவை உள்ளன. நவீன வசதிகளுடன் கூடிய பங்களாவும் உள்ளது.
source: dinasuvadu.com

Leave a Comment