டாஸ்மாக் பார்களில் நுழைவுக் கட்டணம் உண்டா …!அமைச்சர் தங்கமணி விளக்கம்

டாஸ்மாக் பார்களில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்த அனுமதியில்லை என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

வருகின்ற 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் சுற்றுசூழலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அரசின் இந்த நடைமுறையினால் மக்காத பிளாஸ்டிக் தாள் , மக்காத பிளாஸ்டிக் தட்டு, மக்காத பிளாஸ்டிக் டீ கப், மக்காத தண்ணீர் கப் , தண்ணீர் பாக்கெட் , பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் , பிளாஸ்டிக் கைப்பை மற்றும் பிளாஸ்டிக் கொடி என 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தடையின் எதிரொலியாக மதுபானக் கடைகளில் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை நுழைவுக் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது  தொடர்பாக அமைச்சர் தங்கமணி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  டாஸ்மாக் பார்களில் நுழைவுக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. டாஸ்மாக் பார்களில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்த அனுமதியில்லை என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Leave a Comment