சென்னை சத்யம் திரையரங்கில் தலயின் 'விஸ்வாசம்' கட்டவுட்!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டிற்கு இன்னோர் தீபாவளி போல இருக்கிறது. காரணம், தல நடிக்கும் விஸ்வாசம் படமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படமும் திரைக்கு வர உள்ளது.
இந்த இரண்டு நடிகர்களின் படமும் இதுவரை ஒரே நாளில் ரிலீசானது இல்லை. ஆதலால் இந்த இரு பட தாயாரிப்பாளர்களும் போட்டி போட்டு கொண்டு தியேட்டரை புக் செய்து வருகின்றனர். ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கி வருகின்றனர். தற்போது சென்னையில் பிரபல திரையரங்கான சத்யம் சினிமாஸில் விஸ்வாசம் படத்தின் கட்டவுட்டை ஏற்றி தற்போதே ப்ரோமோஷன் வேலைகளின் தீவிரம் காட்ட தொடங்கிவிட்டனர். இது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment