கோவில்பட்டியில் புகழ்பெற்ற செண்பகவள்ளியம்மன் கோவில் கருவறையில் நுழைந்த மர்மப்பெண் கைது…??

கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் கோவில் கருவறையில் சென்று அம்மன் நகையை திருடிய பெண் – கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புகழ்பெற்ற செண்பகவள்ளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து அறநிலையதுறையின் கீழ் செயல்படுகிறது. இக்கோவிலுக்கு தினதோறும் ஆயிரணகணக்கான பக்தாகள் வந்த சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இக்கோவிலில் இன்று வழக்கம் போல் நடைதிறக்கப்பட்டது அதனை தொடர்ந்து அதிகாலை பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து செண்பக வள்ளியம்மனுக்கு பூஜை முடிந்தது அருகில் உள்ள சாமிக்கு பூஜை செய்வதற்காக குருக்கள் சென்ற நேரத்தில் அங்கு பக்தர் போல் வந்த ஒரு பெண் அம்மன் கருவறைக்கு சென்று அம்மன் அணிந்திருந்த தாலி வலையல்,கம்மல்,மூக்குத்தி மற்றும் வெள்ளி காப்பு,கொழுசுகளை திருடி கொண்டிருக்கும் போது அங்கு வந்த குருக்கள் அதிர்ச்சி அடைந்தார். உடனே வெளியே காவலுக்கு இருந்த ஊழியர்களை அழைத்து அந்த பெண்னை பிடித்தனர். பின்னர் கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் அங்கு வந்த போலீசார் அப் பெண்ணை கைது செய்தனர். பின்னர் காவல்நிலையத்தில் சென்று விசாரணை செய்ததில் அவர் திருடிய நகை மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். அப்பெண் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த செட்டிகுறிச்சியை சேர்ந்த அருள்செல்வம் என்பவவரது மகள் சண்முகசுந்தரி (35) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அப்பெண் மீது குருவிகுளம்,கழுகுமலை,இருக்கண்குடி ஆகிய காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

மேலும் திருட்டு காரணமாக கோவில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. ஒரு பெண் தனியாக ஒரு புகழ்பெற்ற பெரிய கோவில் கருவறை வரை சென்று அம்மனின் நகைகளை திருடிய சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட சண்முகசுந்தரி கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு நெல்லை சிறையில் அடைக்கப்பட்டார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment