காவலர் வீடுகளின் தரைஇடம் (Floor Space) உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழக காவலர் வீடுகளின் தரைஇடம் (Floor Space) உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.மேலும்,இது தொடர்பாக தமிழக காவல்துறை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
“காவலர் வீடுகளின் தரைஇடம் (Floor Space) உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.அதன்படி,
- காவலர்,தலைமைக் காவலர்களுக்கு 650 ச.அடி-யிலிருந்து 750 ச.அடியும் (15.38%),
- உதவி ஆய்வாளர்களுக்கு 724 ச.அடி-யிலிருந்து 850 ச.அடியும் (17.40%),
- ஆய்வாளர்களுக்கு 843 ச.அடி-யிலிருந்து 1000 ச.அடியும் (18.62%),
- காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு 1273 ச.அடியிலிருந்து 1500 ச.அடியும் (17.83%) உயர்த்தி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.