காவலர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – தமிழக அரசு அரசாணை!

police

காவலர் வீடுகளின் தரைஇடம் (Floor Space) உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழக காவலர் வீடுகளின் தரைஇடம் (Floor Space) உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.மேலும்,இது தொடர்பாக தமிழக காவல்துறை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
“காவலர் வீடுகளின் தரைஇடம் (Floor Space) உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.அதன்படி,
  • காவலர்,தலைமைக் காவலர்களுக்கு 650 ச.அடி-யிலிருந்து 750 ச.அடியும் (15.38%),
  • உதவி ஆய்வாளர்களுக்கு 724 ச.அடி-யிலிருந்து 850 ச.அடியும் (17.40%),
  • ஆய்வாளர்களுக்கு 843 ச.அடி-யிலிருந்து 1000 ச.அடியும் (18.62%),
  • காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு 1273 ச.அடியிலிருந்து 1500 ச.அடியும் (17.83%) உயர்த்தி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.