இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சீன சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு மங்கோலியா பயணம்!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  மங்கோலிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அந்நாட்டுக்கு சென்றுள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டிற்காக சீனா சென்றிருந்த அவர், அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, மங்கோலிய தலைநகரான உலன்பேட்டருக்கு சென்றார். விமான நிலையத்தில் அவரை, மங்கோலிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் பேட்செட்சேக் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இந்தியா- மங்கோலியா இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தரம்தின் சோகோட் பேட்டருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும் இந்தியா-மங்கோலியா கூட்டு ஆலோசனை குழு கூட்டத்திலும் சுஷ்மா பங்கேற்கிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment