இந்திய வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் திருப்பூர், திருச்சி, சென்னை…!!

உலகின் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் திருப்பூர், திருச்சி மற்றும் சென்னை நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் அடிப்படையில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.உள்நாட்டு மொத்த உற்பத்தி அடிப்படையில் நடத்தப்பட்டுள்ள இந்த ஆய்வில், 2019 முதல் 2035 வரை வேகமாக வளரும் நகரங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் முதல் இடத்தை ஆப்பிரிக்காவின் தர் இஸ் சலாம் நகரம் பிடித்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் உலகின் 20 நகரங்களின் பட்டியலில் 17 இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
2019 முதல் 2023-ம் ஆண்டு வரை வேகமாக வளரும் இந்திய நகரங்களின் முதல் 10 இடங்கள் பட்டியலில் சூரத் முதலிடத்தையும் ஆக்ரா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
3-வது இடத்தில் பெங்களூரு, 4-வது இடத்தில் ஐதராபாத், 5-வது இடத்தில் நாக்பூர், 6-வது இடத்தில் திருப்பூர், 7-வது இடத்தில் ராஜ்கோட், 8-வது இடத்தில் திருச்சி, 9-வது இடத்தில் சென்னை மற்றும் 10-வது இடத்தில் விஜயவாடா உள்ளது.இதேபோல மக்கள் தொகை அதிகரித்து வரும் முதல் 10 நகரங்களின் பட்டியலில் மும்பை இடம்பெற்றுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment