இந்திய குடியரசு நாள்- ஜனவரி 26- ஏன்…??

இந்தியா விடுதலை பெற்றிருந்தாலும், இந்தியக் குடியரசின் சட்டங்கள் ஆங்கிலேயர்கள் அமைத்து வைத்ததாகவே இருந்தது அதனை சுதந்திர இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்திடும் நோக்குடன் இந்திய விடுதலைக்குப் பிறகு, பாபு ராஜேந்திரப் பிரசாத் அவர்களின் தலைமையில் புதிய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது. அந்த அரசியல் நிர்ணய சபையால், டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியலமைப்பு சாசன வரைவுக்குழு அமைக்கப்பட்டு, புதிய சிறப்பு மிக்க இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எழுதப்பட்டது.
முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்திய பாராளு மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. அது ஜனவரி 26ம் நாள் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. 1930ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி “பூரண ஸ்வராஜ்யம் – முழு விடுதலை” என்ற கோஷத்தை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டு அதனையே கொள்கை முழக்கமாக அற்வித்தது. அந்த நாளை நினைவுகூறும் வண்ணம் ஜனவரி 26ம் நாளை குடியரசு தினமாக அறிவித்தார்கள்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment