இந்திய குடியரசுதின விழாவில் பங்கேற்றது எனக்கு பெருமை… பிரான்ஸ் அதிபர் புகழாரம்.!

PM Modi - French President Emmanuel Macron

கடந்த ஜனவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.  தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்துகொண்டார். அவர் , இந்திய குடியரசு தினவிழாவில் கலந்துகொண்டது பற்றியும் இந்தியா உடனான பிரான்ஸ் உறவு பற்றியும் பல்வேறு தகவல்களை அண்மையில் கூறியுள்ளார். பாஜக எம்பிகளுக்கு வேண்டுகோள்! இன்று மக்களவையில் பிரதமர் மோடி உரை! இம்மானுவேல் மேக்ரான் தனது எக்ஸ் சமூக வலைதள வாயிலாக கூறுகையில், இந்தியா … Read more

தொடர் விடுமுறை: இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Pongal special buses

பண்டிகைகள் காலங்களில் தொடர் விடுமுறையை முன்னிட்டு பொது மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம். அதன்படி, குடியரசு தினம், தைப்பூசம், சனி மற்றும் ஞாயிறு என மொத்தம் 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னையிலிருந்து, தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 24, 25ஆம் தேதிகளில் தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 405 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். … Read more

காந்தி சிலைக்கு நோ.! உழைப்பாளர் சிலைக்கு ஓகே.? குடியரசு தின விழாவில் பார்வையாளர்களுக்கான அனுமதி.?

சென்னையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் இந்த வருடம் காந்தி சிலை முன்பு குடியரசு தின அணிவகுப்பு நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கம் போல இந்த வருட குடியரசு தினவிழாவுக்கும் தமிழக அரசு முன்னேற்பாடுகளை தற்போதே தொடங்கி விறுவிறுப்பாக செய்லபடுத்தி வருகிறது. ஆனால் அதில் மிக பெரிய மாற்றம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது. ஆண்டுதோறும் சென்னை மெரினா கடற்கரை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில், டிஜிபி அலுவலகத்திற்கு அருகே காந்தி சிலை முன்பு குடியரசு தினவிழா அணிவகுப்பு நடைபெற்று … Read more

கொரோனா எதிரொலி…! தமிழக ஆளுநர் அளிக்கும் குடியரசு தின விழா தேநீர் விருந்து தள்ளி வைப்பு..!

கொரோனா பரவல் காரணமாக குடியரசுதினவிழாவை முன்னிட்டு, நடக்கவிருந்த குடியரசு தின தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தகவல்.  தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வண்ணம் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக குடியரசுதினவிழாவை முன்னிட்டு, நடக்கவிருந்த குடியரசு தின தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த … Read more

குடியரசு தின அலங்கார ஊர்தி நிராகரிப்பு – ஓபிஎஸ் கண்டனம்!

குடியரசு தின அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், இந்திய அரசமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளான ஜனவரி 26-ஆம் நாள் இந்தியக் குடியரசு தினமாக புது டெல்லியிலும் மற்றும் இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கொண்டாடப்படுகிறது. புது டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார்கள். இதனைத் … Read more

#Breaking : டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக ஊர்திகள்!

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் இருந்து தமிழக ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள கோரிக்கை செய்து தமிழக அரசு சார்பில் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திகள் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட ஊர்திகளில் உள்ள உருவப்படங்களில் பாரதியாரை மட்டுமே தங்களுக்கு தெரிவதாகவும், உலக தலைவர்களுக்கு வ.உ.சி, வேலுநாச்சியார், கப்பலோட்டிய … Read more

அத்தாரி வாகா எல்லையில் நடைபெற்ற கொடி இறக்கும் சடங்கு!

இன்று 72 வது குடியரசு தினத்தை முன்னிட்டு அத்தாரி வாகா எல்லையில், கூடியிருந்த பொதுமக்கள் முன்னிலையில் கொடி இறக்கும் சடங்கு நடைபெற்றுள்ளது. இன்று 72 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, குடியரசு தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் வழக்கம் போல பல இடங்களிலும் கொடிகள் ஏற்றப்பட்டு குடியரசு தினத்தை மக்கள் கொண்டாடினர். இந்நிலையில் குடியரசு தினத்தின் ஒரு பகுதியாக இந்தியா பாகிஸ்தான் நாடுகளின் … Read more

குடியரசு தினவிழா ஒத்திகையில் கலந்து கொண்ட 150 இராணுவ வீரர்களுக்கு கொரோனா!

டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை விழாவில் கலந்து கொண்ட ராணுவ வீரர்களில் 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், மேலும் ஜாக்கிரதையுடன் இருக்குமாறு … Read more

பஞ்சாப் கலைஞர்களுடன் “நடனமாடி” அசத்திய அதிமுக அமைச்சர்.!

இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக  அனைத்து பகுதியிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரையில் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று நடந்த தேசிய ஒருமைப்பாட்டு முகாமில் பஞ்சாப் மாநில கலைஞர்களுடன் நடனமாடி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அசத்தினார். இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இன்று சென்னை மெரினா காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேறினார். மேலும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் அமைச்சர்கள் கலந்துகொண்டு … Read more

லடாக்கில் 17000 அடி உயரத்தில் குடியரசு தினம் கொண்டாட்டம்.!

இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தோ-திபெத்திய எல்லை பகுதியில் உள்ள காவல்துறை (ஐ.டி.பி.பி) பணியாளர்கள் 17000 அடி உயரத்தில் தேசியக் கொடியுடன் பனியில் குடியரசு தினத்தை கொண்டாடினர். இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக  கொண்டாடப்பட்டு வருகிறது.இதைத்தொடர்ந்து  இன்று சென்னை மெரினா காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேறினார். இந்நிலையில் இந்தோ-திபெத்திய எல்லை பகுதியில் உள்ள காவல்துறை (ஐ.டி.பி.பி) பணியாளர்கள் 17000 அடி உயரத்தில் … Read more