இந்தியா, பாகிஸ்தான் பிரச்சினைகள் எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்களாம்..!ப்ளீஸ் இப்டி மட்டும் பண்ணாதீங்க..! கெஞ்சும் அக்தர் …!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி  காஷ்மீர் சுதந்திரம் குறித்து கடந்தவாரம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நிலையில், இப்போது சோயிப் அக்தரும் அதேபோன்று கருத்தை பதிவு செய்துள்ளார்.

காஷ்மீரில் சுதந்திரத்துக்காக போராடும் மக்கள் இந்திய ராணுவத்தால் கொல்லப்படுகிறார்கள் என்று கடந்த வாரம் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி கருத்துத் தெரிவித்து இருந்தார். இதற்கு இந்திய வீரர்கள் கவுதம் கம்பீர், விராட் கோலி, ரெய்னா ஆகியோரும் முன்னாள் கேப்டன்கள் கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் வரிசையாக பதிலடி கொடுத்திருந்தனர்.

Image result for akhtar shahid afridi

இந்த சர்ச்சை அடங்குவதற்குள், பாகிஸ்தானின் மற்றொரு முன்னாள் வீரர் ஷோயப் அக்தரும் சர்ச்சைக்குரிய வகையில் காஷ்மீர் குறித்து பேசியுள்ளார். மான் வேட்டையாடி யவழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் விதித்து இருந்தது. அதற்கு வருத்தம் தெரிவித்து அக்தர் ட்விட் செய்திருந்தார்.

Image result for shahid afridi tweet about kashmir

இன்று ஜாமீனில் சல்மான்கான் விடுதலை செய்யப்பட்டதும் அதை பாராட்டியும், நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அக்தர் ட்விட் செய்தார். அதில் காஷ்மீர் குறித்து தெரிவித்துள்ளார்.

அக்தர் பதிவிட்ட ட்விட்டில், ‘என் வாழ்க்கையில் என்றாவது ஒருநாள், காஷ்மீர், பாலஸ்தீனம், ஏமன், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும், உலகில் பெரும் துன்பங்களை சந்தித்து வரும் பகுதிகளும் விடுதலைபெற்றன என்ற செய்தியைக் கேட்பேன். ஏனென்றால் எனது இதயம் முழுவதும் மனிதநேயத்துக்காகவும், அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்காகவும் இரக்கப்படுகிறது’என்று தெரிவித்தார். பின்னர் இந்த பதிவை அழித்துவிட்டார்.

மற்றொரு ட்விட்டில், இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமை குறித்து அக்தர் தெரிவித்துள்ளார். அதில், ‘இந்தியா, பாகிஸ்தான் ஒற்றுமைக்காக இரு நாட்டு இளைஞர்களும் கைகோர்த்து ஒன்றாக நிற்க வேண்டும். கடந்த 70 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையிலான தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகளை ஏன் தீர்க்க மறுக்கிறீர்கள் என்று அதிகாரிகாரிகளிடம் கேட்கிறேன். இன்னும் 70 ஆண்டுகள் நம்முடைய வாழ்க்கை வெறுப்புடன்தான் கழியவேண்டுமா என்று உங்களிடம் கேட்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Image result for shahid afridi tweet about kashmir

இந்த ட்விட் தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அக்தர் கூறுகையில், ‘இந்தியா, பாகிஸ்தான் அரசுகள் தங்களுக்கு இடையிலான பல்வேறு பிரச்சினைகளை பேசித் தீர்வுகாண்பது அவசியமாகும். இன்னும் எத்தனை நாட்களுக்கு இரு தரப்பும் ரத்தம் சிந்திக்கொண்டிருப்பது. நம்முடைய குழந்தைகளும் இதேபோன்ற காலகட்டத்தில்தான் வாழ வேண்டுமா. கடந்த 70 ஆண்டுகளாக இருதரப்பிலும் எண்ணற்ற உயிர்களை இழந்துவிட்டோம்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment