அண்டார்டிகாவில் நிலவும் வினோதமான காலநிலை!

அண்டார்டிகா வெயில் கொளுத்துகிறது. மனம் நிழலில் இளைப்பாற விரும்புகிறது. மழைக்கு ஏங்கித் தவிக்கிறது. ஆனால் இதே பூமியில் இன்னொரு பக்கம் குளிர்காலமாக உள்ளது. அவர்கள் வெயிலில் முகம் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த பூமியில் இப்படி மழை, வெயில், புயல், வெள்ளம், பஞ்சம் என பல காலநிலைகள் மாறிமாறி ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அடிக்கடி மாறும் காலநிலைகளே உயிரினங்களின் வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்கிறது. பஞ்சம், கடும்குளிர் போன்ற சில கொடுமையான காலநிலைகள் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்துள்ளது.
பூமியின் வினோத காலநிலை, தட்பவெட்பம் பற்றிய சில சுவாரசிய சங்கதிகளை இங்கே தெரிந்து கொள்வோம்.உலகின் அதிகமான வெப்பநிலை என்றால் அண்டார்டிகாவில் 14.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியதுதான். 1974 -ம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதி இந்த வெப்பநிலை அங்கு நிலவியது.
 உலகில் அதிகமான மழைப்பொழிவு என்றால், பிரான்சின் ரீயூனியன் தீவில் ஒரே நாளில் 182.5 சென்டிமீட்டர் மழை பெய்ததுதான். 1966-ல், ஜனவரி 8-ம் தேதி, டெனிஸ் எனும் புயல் ஏற்பட்டபோது இந்த கடும் மழைப்பொழிவு ஏற்பட்டது.
உலகில் அதிகமான மழைப்பொழிவு ஏற்படும் இடம் என்றால், இந்தியாவின் சிரபூஞ்சிதான். இங்கு ஆண்டுக்கு 25.4 மீட்டர் மழைப் பொழிவு பெய்தது சாதனையாக பதிவாகி இருக்கிறது.
உலகின் மிகப்பெரிய பனிப்பொழிவு அமெரிக்காவின் வாஷிங்டன் அருகே உள்ள மவுண்ட் ரெயினியர் என்ற இடத்தில் நிகழ்ந்தது. 1971-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதிக்கும் 1972-ம் ஆண்டு 18-ந் தேதிக்கும் இடைப்பட்ட ஓராண்டு காலத்தில் 31.1 மீட்டர் பனிப்பொழிவு இங்கு நிகழ்ந்துள்ளது.
உலகின் மிக வேகமான காற்று வீச்சு 1999-ம் ஆண்டு மே 3-ந் தேதி பதிவாகி உள்ளது. அமெரிக்காவின் ஒக்லகாமா நகருக்கு அருகே மணிக்கு 482 கி.மீ. வேகத்தில் இந்த பெரும் காற்று வீசியது.
 மேகங்கள் 3 வகைப்படும். அவை சிமுலஸ், ஸ்டிராடஸ், சிர்சஸ் என்பதாகும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment