” அசத்தும் தமிழக அமைச்சர் செங்கோட்டையன் ” நாளை முதல் தமிழகத்தில் நீட் பயிற்சி மையம்..!!

சென்னை ,

தமிழக அமைச்சர்களிலே நல்லவர் இருக்கிறாரார் என்றால் சொல்வது மிகவும் அரிதான காரியம் , அந்தவகையில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மட்டும் ஒரு இடம்புடித்துள்ளார்.

தமிழக அமைச்சர்களின் துறை சார்பில் புதிய புதிய மாற்றங்களை கொண்டுவந்து வரவேற்பை பெற்றது என்றால் அது பள்ளி கல்வித்துறைதான்.அந்த வகையில் ஏராளனான மாற்றங்களை பள்ளிகல்வித்துறையில் அமைச்சர் செங்கோட்டையன் கொண்டு வந்துள்ளார்.

சென்னை அடையாறில் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழகம் முழுவதும் நாளை 412 நீட் மையங்கள் தொடங்கப்படும் என்றும், இதற்காக 3 ஆயிரத்து 200 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் , தமிழகம் முழுவதும் நாளை முதல் 412 நீட் பயிற்சி மையங்கள் செயல்பட தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவிததுள்ளார்.தொடர்ந்து புதிய புதிய மாற்றங்களை கொண்டுவருவதால் இத்துறை பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

DINASUVADU

author avatar
Dinasuvadu desk

Leave a Comment