2017 ஆம் ஆண்டில் , எல்லைப் பகுதியில் நடைபெற்ற சண்டைகளில் 138 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.இந்தியத் தரப்பில் 28 படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர்

2017 ஆம் ஆண்டில் , எல்லைப் பகுதியில் நடைபெற்ற சண்டைகளில் 138 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் 860 முறை சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீரில் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்துள்ளது.எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 138 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியத் தரப்பில் 28 படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த ஆண்டில் உயிரிழந்த இந்தியப் படையினரோடு ஒப்பிடும் போது பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு மிகவும் அதிகம். எனினும், இந்தியா கூறும் 138 பேரில் பலர் பொதுமக்கள் எனவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

source: dinasuvadu.com