மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் முக்கியப் பங்களிக்கும் நிதி ஆயோக் அமைப்பு எலக்ட்ரிக் வாகனங்கள் நடைமுறைக்கு வந்தால் ஆங்காங்கே மின்னூட்ட மையங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஏற்கனவே மின்பற்றாக்குறை நிலவும் நாட்டில் இதனால் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லித்தியம் பேட்டரிகள் தேவை எனவும் லித்தியம் சுலபமாக கிடைக்கக் கூடிய பொருள் அல்ல என்றும் நிதி ஆயோக் கருதுகிறது. பேட்டரி தயாரிப்பில் இந்தியா இன்னும் நிபுணத்துவம் பெறவில்லை எனவும் பேட்டரி இறக்குமதிக்கு சீனாவைத்தான் சார்ந்திருக்க வேண்டும் எனவும் நிதி ஆயோக் கூறுகிறது. பெட்ரோல் டீசல் பயன்பாட்டிற்கு மாற்றாக மெத்தனாலைப் பயன்படுத்தலாம் எனவும் மெத்தனாலை எளிதில் தயாரிக்கலாம் எனவும் நிதி ஆயோக் ஓர் ஆலோசனையினை தெரிவித்துள்ளது.