உடல் வளர்சிக்கு தேவையான சத்துக்கள் கொண்ட சுண்டைக்காய்..,

நாம் நம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் அதிகமான மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளது. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு  ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.
 
சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன.
உடல் வளர்சிக்கு தேவையான  புரதம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை சுண்டைக்காயில் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை  சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.
வயிற்றுக் கிருமிகள்  உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின்  உட்புறச் சுவர்கள் பலமடையும்.
 
சுண்டைக்காயில் இரண்டு வகை உள்ளது.அவை  காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை ஆகும். மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது. இவை மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும்.  குடற்புண்களை ஆற்றும்.
பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும். சுண்டைக் காயை உப்பு  கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல், காச நோய்  குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment