8 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கினோம்!!ஆனா முடியல!!புலம்பும் ரோகித் சர்மா

இந்த போட்டி மிகவும் கஷ்டமான போட்டி  என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வருத்தத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி  3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.நேற்று  முதலாவது  டி20 போட்டி நடைபெற்றது.இந்த போட்டி வெல்லிங்டனில் உள்ள வெஸ்ட்பாக் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிம் செரிபெர்ட் மற்றும் கெலின் முன்ரோ களமிறங்கி இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். கெலின் முன்ரோ 34 ரன்கயிலும் , டிம் செரிபெர்ட் 84 ரன்களிலும் , கேன் வில்லியம்சன் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

 

இதையடுத்து நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்சில் 20 ஓவர்களில்  6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது இந்திய அணி சார்பில் ஹார்டிக் பாண்டியா 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் பேட்டிங்கை தொடங்கிய  இந்திய அணி  19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  139 ரன்கள் மட்டுமே எடுத்தது.இந்திய அணியில் தோனி 39 ரன்கள் அடித்தார்.இதன்மூலம்  நியூஸிலாந்து அணி  80  ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.மேலும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில்  முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா  கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,இந்த போட்டி மிகவும் கஷ்டமான போட்டி ஆகும். அதேபோல் தொடர்ச்சியாக நாங்கள்  விக்கெட்களை இழந்துவிட்டோம். இதுபோன்ற இலக்குகளை முந்தைய  காலங்களில் சேஸ் செய்திருக்கிறோம். அதனால்தான், 8 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கினோம். எவ்வளவு இலக்கு இருந்தாலும் அடித்துவிடலாம் என நினைத்தோம். ஆனால், சிறிய பார்ட்னர்ஷிப் கூட அமையவில்லை. மிகப்பெரிய இலக்க விரட்டும் போது அதுதான் முக்கியமானது என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வருத்தத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Comment